நேற்று (நவம்பர் 06) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ் ஆகியோருக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்தும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க