இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட நபர்கள் தொடர்பில் நடவடிக்கை

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களை இணையதளத்தில் பதவியேற்றியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதற்கிணங்க சட்டதரணி சுனில் வதகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (நவம்பர் 06) குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் ஜனாதிபதி தொடர்பில் போலி தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க