2021ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சிங்கராஜா வனப்பகுதியினூடான வீதியை அகலப்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (அக்டோபர் 28) மொஹமட் லாஃபர் மற்றும் பி. குமரன் ரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதி சார்பில் முன்னிலையாக அரச சட்டத்தரணிகள் எவரும் நியமிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டதிற்கிணங்க உடனடியாக அரசு சட்டத்தரணியொருவரை நியமிக்க வேண்டுமென கூறி குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க