பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானதென்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (அக்டோபர் 24) உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருக்குமாயின் அவற்றை அக்டோபர் 28ம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இம்மனுவை எதிர்வரும் நவம்பர் 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க