சினிமாபுதியவை

குக்கு வித் கோமாளி சீசன் 5 இல் இருந்து நாஞ்சில் விஜயன் விலகல்!

குக்கு வித் கோமாளி சீசன் 5 விஜய் டிவியில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது.
கோமாளிகளும் சிலர் புதியதாக என்ட்ரி கொடுத்திருந்தார்கள். செஃப் வெங்கடேஷ் பட் வெளியேற மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட நாஞ்சில் விஜயன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ஹாய் ப்ரண்ட்ஸ், நான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இதற்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் புரொடியூஸ் செய்கிற எந்தவொரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. உங்கள் சப்போர்ட்டிற்கு நன்றி மக்களே” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்து தெரிவிக்க