எதிர்பார்க்கப்பட்ட G&G இரத்தினக்கற்கள் வர்த்தக சேவை மையத்தின் திறப்பு விழா அண்மையில் இலங்கையின் Cinnamon Grand Colombo இல் இடம்பெற்றது.
G&G இரத்தினக்கற்கள் வர்த்தக தளம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது, இது இலங்கையின் இரத்தினக்கற்கள் வர்த்தகம் உலக அரங்கில் ஒரு முக்கியமான படியை குறிப்பதோடு இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.
தொடக்க விழா அரசு மற்றும் தொழில்துறையினரிடமிருந்து பரவலான கவனத்தைப் பெற்றதுடன், நிகழ்வில் பல உயர்மட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை இரத்தினக்கற்கள் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எம்.பி இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், பல சபை உறுப்பினர்கள் மற்றும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகளின் தூதரகங்களின் அதிகாரிகள் G&G இரத்தினக்கற்கள் வர்த்தக தளத்தை ஸ்தாபிப்பதற்கும் வாழ்த்துவதற்கும் வருகை தந்திருந்தனர்.
கருத்து தெரிவிக்க