இதுவரை நடந்த போரில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் என்று உக்ரைன் கூறியதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்யா; கிய்வ், ஒடேசா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ் மற்றும் லிவிவ் ஆகிய நகரங்களைத் தாக்கியதில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வீடுகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை தாக்குதலுடன் ரஷ்யா “அதன் ஆயுதக் களஞ்சியத்தில் ஏறக்குறைய அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியது” என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஒரே நேரத்தில் இவ்வளவு ஏவுகணைகள் ஏவப்பட்டதை பார்த்ததில்லை என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க