உலகம்

அணு ஆயுதங்கள் இருப்பதால் வடகொரியா பாதுகாப்பாக உள்ளதாக கிம் ஜோங் தெரிவிப்பு !

கொரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால்  67 வது ஆண்டு விழா வடகொரியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . இந்த விழாவில் உரையாற்றிய வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங், “இந்த பூமியில் இனி போர் நடைபெறாது ” எனக் கூறி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகி உள்ளது. நமது நாட்டில் பாதுகாப்பும் , எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கிம் இனி போர் நடக்காது என உரையாற்றி இருப்பது தொடர்பில் சர்வதேச வல்லுநர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க