இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பட்டலந்த, மாகோலவில் அமைந்துள்ள பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் இராணுவக்கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், “கடினமான காலங்களில் பாகிஸ்தான் செய்த உதவியை இலங்கையர்கள் மறக்கமாட்டார்கள்.
ஆதாரமற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது சுமத்தப்பட்ட போது பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக நின்றது. புலிகளுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு முக்கியமானது. பயங்கரவாதத்திற்கு எதிராக நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிய வேளையிலும், ஆதாரமற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது சுமத்தப்பட்டது. இந்த வேளையில் பாகிஸ்தான் வழங்கிய உதவியை மறக்க முடியாது” என்றார்.
கருத்து தெரிவிக்க