உலகம்

கொங்கொங் விடயம் தொடர்பில் பிரிட்டனின் செயலுக்கு சீனா கண்டனம் !

ஒரு காலத்தில் பிரிட்டனின் கொலனியாக இருந்த  கொங்கொங்கை தற்போது சீனா தன்வசப்படுத்தி , அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த முயன்று வருகிறது ‌‌‌. சீனாவின் இந்த சட்டத்தை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ‘ ஒரு நாடு இரு சட்டம்’ என்ற ரீதியில் இயங்கி வந்த கொங்கொங் சட்டத்தை மாற்றி அமைத்து, முற்றிலுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீன கம்யூனிச அரசு முயல்கிறது. இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஜனநாயக கட்சியினர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சீனாவின் சர்வாதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கொங்கொங் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றார்கள். தற்போது பிரிட்டன் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிச அரசு, கொங்கொங்கை தன்வசப்படுத்த நினைத்தால் கொங்கொங் உடனான ஒப்பந்தத்தை முறிக்கப் போவதாக பிரிட்டன் எச்சரிக்கை விடுத்த நிலையில், சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், பிரிட்டனின் இந்த செயலுக்கு சீனா விரைவில் பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை தொடர்ந்து அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் கொங்கொங் உடனான தொடர்பை முறித்துக் கொண்டன. அண்மையில் அமெரிக்கா கொங்கொங் உடன் வர்த்தக தொடர்பை முறித்துக் கொண்டது ‌ இதன் காரணமாக கொங்கொங்கில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்பொரு காலத்தில் பிரிட்டிஷ் கொலனியாக கொங்கொங் இருந்ததால் தற்போதும் பிரிட்டனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாக பிரிட்டன் நினைத்து விட வேண்டாம். என சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனாவின் இந்த செயற்பாட்டிற்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பினை தெரிவித்த வண்ணம் உள்ளன.

கருத்து தெரிவிக்க