விளையாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடியது.

முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 108 ஓட்டங்கள், விராட் கோலி 63 ரன்கள், புஜாரா 58 ஓட்டங்கள்
சேர்த்தனர். இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா கைப்பற்றினார்.

கருத்து தெரிவிக்க