- எப்போதும் பிறர் மீது குற்றம் குறை கண்டுபிடிக்கும் குணமுடையவர்களிடம் பேசக்கூடாது. வயிறு வளர்ப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கீழ்மக்களிடம் பழகுதல் கூடாது.
- உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.
கருத்து தெரிவிக்க