” ரணிலும், சஜித்தும் தந்தை, மகன் போலவே செயற்பட்டுவருகின்றனர். இருவருக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறப்பானதொரு முடிவை இருவரும் எடுப்பார்கள்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று 08 கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் எவ்வித மோதலும் இல்லை. எனினும், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடு இருக்கின்றது. ஆனால், இருவரும் இணைந்து சிறப்பானதொரு முடிவை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.
இருவருக்குமிடையில் நாளை பேச்சு நடைபெறவுள்ளது. இதன்போது இணக்கப்பாடு எட்டப்படலாம். ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படாது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க