அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 500 புதிய பாடசாலை கட்டிடங்கள் இன்றைய தினம் மாணவர் உரிமைக்கு வழங்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வேலைத்திட்டத்திற்கு இணைவாக கஹதுடுவ, வெனிவெல்கொல பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஷிஸ்யோதா விசேட கல்வி தேசிய நிறுவனம் இன்றையதினம் மாணவர் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 500 கட்டிடங்களுக்கென 10 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை கட்டமைப்பை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்து கிராமிய பாடசாலைகளை பூரணப்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்து 64 பாடசாலைகளில், 18 ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கென மொத்தமாக 65 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க