வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமையஇலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும்ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ இன்றுஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் இப் புத்தக திருவிழாநிகழ்வை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்
யாழில் முதன்முறையாக மிகப்பிரமாண்டமாய் இன்று செவ்வாய்க்கிழமைஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் புத்தகக்கண்காட்சியானது எதிர்வரும் செப்டம்பர்1ஆம் திகதி வரை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சி மண்டபத்தின்ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர்கதைகள் , வழிகாட்டி நூல்கள் , ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும்இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ் ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள் , புத்தகநிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அஅதிகரிக்க, பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
இந் நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர் ஆர்னோல்ட் புத்தக திருவிழாவை ஆரம்பித்து வைப்பது மகிழ்ச்சி என்றும் இவ்வாறான நிகழ்வுகள் எமது மக்களுக்குஒரு வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.
[ நிருபர் தம்பிராஜா பிரதீபன் ]
கருத்து தெரிவிக்க