உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு’

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால்  போதை ஒழிப்புசெயற்திட்த்ததை நடைமுறைப் படுத்தும் விதமாக  துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
போதையற்ற  பிரதேசத்தை உருவாக்குவோம் என்ற தவிசாளரின் எண்ணக்கருவுக்கு அமைய குறித்த நிகழ்வு  இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் தலைமையில்  ஆரம்பமாகியது.
இங்கே சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்  மக்கள் மத்தியில் போதையினால் ஏற்படும்  பாதிப்புகள் சீரழிவுகள் என்பன பற்றியும் அதிலிருந்து விடுபடும் வழி வகைகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தவிசாளர் போதை பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளிலிருந்து எனது இளம் சமூகத்தையும்  எமது இனத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
அத்துடன் இந்த போதையை முற்றாக எமது பிரதேசத்திலிருந்து  முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்பதே எமது சபையினுடைய  உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகோள் ஆகும்
ஆகவே இதற்குரிய செயற்திட்டங்களை எமது சபை ஊடாக முன்னெடுத்து வருகின்றோம் அதன் ஒரு அங்கமாகவே இந்த துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மக்களை தெளிவு  படுத்துகின்ற நடவடிக்கையாகும்.
அத்துடன் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்திட்டங்களை  எமது பிரதேச சபையினால் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்  என்றார்.

கருத்து தெரிவிக்க