உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர் – தேர்தல் விஞ்ஞாபனமும் தயாராகிறது!

ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சவை, எதிர்வரும் 11ஆம் திகதி  எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார் என, ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்சவை நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார்.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதி தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க