சினிமா

ஸ்ருதிஹாசனைத் தொடர்ந்து, அக்ஷரா ஹாசனும் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார்!

சினிமாவின் ஒரு பிரிவாக தற்போது வெப் சீரிஸ் வளர்ந்து வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ருதி ஹாசன் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள வெளியாகியிருந்தது. தற்போது அக்ஷரா ஹாசனும் இதில் இணைந்துள்ளார்.

பில்லா, ஆரம்பம், அறிந்தும் அறியாமலும் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷிவ் சங்கர் இயக்கும் ‘பிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸ் தொலைபேசியுடன் தொடர்புடைய ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. இதில் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாகவும் அஸ்வின் ஹீரோவாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சுனைனா, காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க