உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்! ஊடகங்களுக்கு தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இணைத்தலைவர்கள்  தலைமையில்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இணைத் தலைவர்களான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  சிவப்பிரகாசம் சிவமோகன்,திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும்  றிசாட் ஜமால்டீன் ஆகியோரது  தலைமையிலே கூட்டம் இடம்பெறுகின்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வீடு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் சம்பவங்கள் இன்றைய தினம் கலந்துரையாட இருக்கின்றது.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

வடமாகாண ஆளுநர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆரம்பித்த ஊடகங்களுக்கு தடை விதிக்கும் செயற்திட்டத்தை தற்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறார்.

இன்று கூட்டம் ஆரம்பமானபோது ஊடகவியலாளர்கள் வருகை தந்த வேளை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் ஊடகங்களை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சிவப்பிரகாசம் சிவமோகன் இடையிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கூறி, வீடியோ பதிவு எடுக்க வேண்டாம் எனவும் செய்தி மட்டும் சேகரியுங்கள் என்றும் பணித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க