உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்!

வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காமினி பாடசாலையிலிருந்து மன்னார் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட, ‘இளைஞர் சேவைகள்” மன்றத்திற்கு உரித்துடைய வாகனத்துடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி உந்துருளியில் சென்ற 23 வயதுடைய இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் உந்துருளியும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க