எதிர்வரும் உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணி, இங்கிலாந்து அணி பயணித்த பாதையை பின்பற்ற வேண்டும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்து வந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம் கண்டுகொண்டனர்.
2023 இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கு தயாராகும் இலங்கை இங்கிலாந்து பின்பற்றி செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க