சினிமா

‘தமன்னா மற்றும் யோகிபாபுவின் படத்திற்கு பிரபல நகைச்சுவை காட்சியிலிருந்து டைட்டில்’

இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்க, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  டான் கேக்கத்துர் ஒளிப்பதிவில், ஜிப்ரானின் இசையமைப்பில் தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராம்தாஸ், மன்சூர் அலிகான், சின்னத்திரை பிரபலம் டிஎஸ்கே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தமன்னா-யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் ரேவதி நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கவுண்டமணி-செந்திலுக்கிடையிலான சூப்பர்ஹிட் காமெடி வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க