11 ஆயிரத்து 642 மெற்றிக் டொன் நெல் வடமாகாணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் வடக்கிலிருந்து அதிகளவான நெற்கொள்வனவு இடம்பெற்ற சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.
அரசின் நிவாரண விலையில் நெல்லை கொள்வனவு செய்வதன் ஊடாக வடக்கின் விவசாயிகள் அதிகளவில் நன்மையடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 185 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் 3 ஆயிரத்து 182 மெற்றிக் டொன் நெல்லும் முல்லைத்தீவில் 3 ஆயிரத்து 524 மெற்றிக் டொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4 ஆயிரத்து 345 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென 894 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க