உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவு குழு முன் நாளை (ஜூலை 12) ஆஜராகுமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுத் தலைவர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்தார்.
இந்த அதிகாரிகளில் புலனாய்வு சேவையின் பிரதி காவல்துறைமா அதிபர் நிலந்த ஜெயவர்தன, குற்றவியல் புலனாய்வுத் துறையின் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவீரட்ன, அதன் பணிப்பாளர் ஷனி அபேசேகர ஆகியோர் அடங்குவர் என்று குமாரசிறி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் வருண ஜெயசுந்தர, காவல்துறை அத்தியட்சகர் தரங்க பத்திரன(டிஐடி) ஆகியோரும் தெரிவுக்குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்தஅமர்வுகள் காலை 9:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும் அது ஊடகங்களுக்குத் இடமளிக்கப்படாது எனவும் அமர்வின் பதிவுகள் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க