இஸ்லாம் மதத்தை தழுவியவர்களை அவர்களின் விருப்பத்துடன் மீண்டும் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரத்ன தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் மாத்திரம் சிங்கள மற்றும் தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேரை திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணையொன்றை நடாத்தப்படும் எனவும் கூறினார்.
பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் முடிக்க முடியாது என்ற சட்டம் நாட்டில் அமுலில் இருந்தும், பாடசாலை செல்லும் 8 ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த பயங்கரவாதி சஹ்ரானை தடுக்க முடியவில்லை எனவும் கவலை வெளியிட்டார்.
அடுத்து வரும் புதிய அரசாங்கத்தின் ஊடாக பாடசாலை செல்லும் பிள்ளைகளை மணம் முடிக்கத் தடை செய்யும் விதத்தில் கடுமையான சட்டமொன்றையும் கொண்டுவரப் போவதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறினார்.
கருத்து தெரிவிக்க