மக்களின் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார். ஆனால் அவர்கள் மக்களின் கனவுகளை பூர்த்தி செய்வதில்லை என வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மடுக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட 211 ஆவது மாதிரிக் கிராமமான ‘குறிஞ்சி நகர்’ வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.
நல்ல வீடு, பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம், நமது முன்னேற்றம் என்ற பல்வேறு கனவுகளுடன் நீங்கள் தேர்தல் காலங்களில் ஒருவரை உங்களுக்கான தலைவராக தெரிவு செய்கின்றீர்கள்.
இப்படியான கனவுகளை நினைவாக்குவதற்கு, உங்கள் சார்பாக செயல் படுவதற்கு இவர்களை உருவாக்குகின்றீர்கள்
ஆனால் தெரிவு செய்யப்பட்ட மக்களை பற்றி சிந்திக்காது தம்மை பற்றியும் தமது உறவினர் பற்றியுமே சிந்திக்கின்றனர்.
இப்படியானவர்கள் கடந்த அரசாங்கத்திலே காணப்பட்டார்கள்.
உண்மையிலே காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வழியில் நான் உங்களுக்கு உங்கள் அனைவருடைய கனவுகளையும் எதிர் காலத்திலே நிறைவேற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க