வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கான அதிக வரியை இந்தியா நீக்க வேண்டும்-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நாளை ஜப்பானில் ஆரம்பமாகும் ஜி 20 மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமரை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் இதனை தமது ட்விட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.

“பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது.

அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பை இந்தியா கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையை கடந்த ஜூன் 1 ஆம் திகதியோடு அமெரிக்கா இரத்து செய்தது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்தது.

கருத்து தெரிவிக்க