உலகம்

உலகளவில் 99 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள் !

உலகில் 98 98 220 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 இலட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை       98 98 220 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் 53 52 383 ஆகவும், தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 96 077 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் 25 52 956 ஆகவும், உயிரிழந்தோர் 1 27 640 ஆகவும் உயர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க