இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

செம்மணியில் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது அங்கிருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கடந்த பெப்ரவரி 20ம் திகதி நீதிவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (மே 15) மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க