இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

நேற்று (மே 12) மாத்தறை தலைமையக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனையின் போது போலியான எண் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுடன் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக பயணித்த 36 மோட்டார் சைக்கிள்களும் அவற்றின் ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க