இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாதிரியாரிடமிருந்து பணத்தை திருடிய வெளிநாட்டவர் கைது

நேற்று (மே 11) அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் பயணித்த 81 வயதுடைய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கத்தோலிக்க பாதிரியாரொருவர் இலங்கையில் வசிக்கும் தனது மூத்த சகோதரிக்கு மருத்துவ சிகிச்சைக்காக நன்கொடையாகக் கொண்டு வந்த 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை குறித்த விமானத்தில் பயணித்த 54 வயதான சீனப்பிரஜையொருவர் திருடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சீனபிரஜை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க