கடந்த ஏப்ரல் 21ம் திகதி புனித பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்களது மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் மாநாட்டில் இரண்டாவது நாளான நேற்று (மே 08) நான்காவது வாக்கெடுப்பின் பின்னர், சிஸ்டின் சேபலிலிருந்து வெள்ளை புகை வெளியேற்றப்பட்டதனூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க புதிய பாப்பரசராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் ஃபிரான்சிஸ் பிரெவோஸ்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அவர் “லியோ XIV” என்ற பெயரை எடுத்துக்கொண்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க