கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பத்திராஜாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கிணங்க குறித்த வழக்கு தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் (நவம்பர் 29) சாட்சியமளிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததற்கமைய இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விஜித ஹேரத் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க