கடந்த சில தினங்களாக மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக அக்கரப்பத்தனை பிரதேச சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட டயகம மேகமலை யரவள் தோட்டப் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பின் சுவர் ஒன்று இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வாழ்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்தும் அம்மக்கள் குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அசாதாரண காலநிலை காரணமாக டயகம பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க