கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
அதனடிப்படையில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
கரைச்சியில் – 3001 குடும்பங்களை சேர்ந்த 10454 பேரும், கண்டாவளையில் – 757 குடும்பங்களை சேர்ந்த3009 பேரும், பூநகரியில் 3693 குடும்பங்களை சேர்ந்த 12629 பேரும், பச்சிலைப்பள்ளியில் 496 குடும்பங்களை சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்டுளு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களிற்கு கரு்த்து தெரிவித்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட வகையில் தற்புாது வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை வறட்சியினால் நீர்நிலைகளின் நீர்மட்டம் விரைவாக குறைவடைந்துள்ளதாகவும், மக்கள் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வறட்சி தொடரும் பட்சத்தில் மோசமான நிலை ஏற்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைக்கப்பெற்று அவ்வந்த பிரதேச செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குறித்த நிதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க