இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிா்வரும் 3ம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சாா்பில் வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது.
சமீப காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களான வெடுக்குநாரி சிவன் ஆலயம், கன்னியா பிள்ளையார் ஆலயம், கந்தப்பளை விநாயகர் ஆலயம் போன்றவையும் திருக்கேதீச்சர ஆலய வளைவு பிற சமயத்தவர்களால் முறையே அழிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வருகிறது.
பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதும் இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலையை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த அதர்ம செயல்களைக் கண்டித்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் எதிர்வரும் சனிக்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது .
இதில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்து சமயப் பேரவையும் இணைந்து முன்னெடுக்கும் அமைதி வழி செயற்பாட்டில் அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய அறங்காலவலர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தவறாது பங்குகொண்டு இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துமாறு ஆதீனத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க