இலங்கைக்கான வருகை தர விசாரணையின்போது சிங்கப்பூரை போன்று இலங்கையிலும் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக்கப்பட விருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருக்கின்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் தேதியிலிருந்து 46 நாடுகளின் சுற்றுலா பயணிகள் வருகை தரு விசாவில் வந்து செல்ல முடியும் என்ற தகவலை அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.
இதன்படி சீனாவும் நாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்தியா போன்ற நாடுகள் இந்த பட்டியல் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவே சீனாவும் இந்த இந்தப் பட்டியலில் அடைக்கப்படுவது ஊடாக சீனாவிலிருந்து மேலதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதன்போது சீனாவின் சுற்றுலா மற்றும் ஊடகவியலாளர்கள் குழு ஒன்று அமைச்சரை சந்தித்திருந்தது இதன்போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ஜப்பான், ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே வருகைதரு விசா முறையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன அதனடிப்படையில் சீனாவும் விரைவில் உள்ளடக்கப்படும் என்ற தகவலைத்தான் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
சீனாவை இந்த வருகைதரு விசா பட்டியல் உள்ளடக்குவது தொடர்பு ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது என்றாலும் இடம் பெற்ற உயிர்த்த நீயிரு தாக்குதல் காரணமாக அது பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
கருத்து தெரிவிக்க