உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

சோளத்தின் கொள்வனவு விலை உயர்வு

ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், தந்திரிமலையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.

உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் சோளத்தின் விலை 45 ரூபா ஆக காணப்படுகின்றது இதனை 50 ரூபாவாக அதிகரிக்கவுள்ளோம்.

அத்துடன் தற்பொழுது சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது. சோளத்தை உற்பத்தி செய்பவர்களுக்கு 100 000 ரூபா செலவு ஏற்படும் பட்சத்தில் அதில் 60 000 ரூபாவை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை சோள இறக்குமதியை நிறுத்துவதற்கும் நாம் முயற்சித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தர்.

கருத்து தெரிவிக்க